RRR படத்திற்கு ரசிகனான ஜேம்ஸ் கேமரூன்.. மேலும் இரண்டு உயரிய விருதுகள்.. – ராஜமௌலியிடம் கூறியது என்ன? விவரம் உள்ளே..

RRR படத்தை பார்த்து ராஜமௌலியை பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன் - James Cameron Watched SS Rajamouli RRR film | Galatta

உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள இந்திய திரைப்படம் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். நாளுக்கு நாள் வசூலும் விருதும் அதிகரித்து கொண்டாட்டங்களும் கூடிய படியே இருந்து வருகிறது. சமீபத்தில் உலகளவில் உயரிய விருதான கோல்டன் குலோப் விருதை சிறந்த பாடல் பிரிவில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு.. நாட்டு..’ பாடல்  வென்று இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம் வகித்தது.மேலும் விருதுகள் கூட கூட இந்த படத்திற்கான கவனமும் உலகளவில் கிடைத்து வருகிறது. சாதாரண மனிதனில் இருந்து சாதனை படைத்த பிரபலம் வரை இந்த படத்திற்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற கிரிட்டிக் சாய்ஸ் விருதுக்கான  சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த பாடல், சிறந்த VFX ஆகிய பிரிவுகளில் பரிந்துரை பட்டியலில் இருந்தது. இதனையடுத்து  ஆர் ஆர் ஆர் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான விருதையும் சிறந்த பாடலுக்கான விருதையும் வென்றது.

கோல்டன் குளோப் விருதையடுத்து மேலும் ஒரு வெளிநாட்டு விருதை வென்று இந்திய திரைப்படங்கள் மீது கவனம் சேர்த்துள்ளது ஆர் ஆர் ஆர் திரைப்படம். இதனையடுத்து படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அந்த விழாவில் உலகப் புகழ் பெற்ற டைட்டானிக், அவதார் படங்களை இயக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவர்களை நேரில் சந்தித்ததாகவும் அவருடன் உரையாடியதாகவும் ஆர் ஆர் ஆர் படத்தின் இயக்குனர் ராஜமௌலி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றினார்.

அதில் அவர், “மாமனிதர் ஜேம்ஸ் கேமரூன் RRR படத்தை பார்த்தார்.. அவர் அதை மிகவும் விரும்பினார், அவர் தனது மனைவி சுஸிக்கு RRR பரிந்துரை செய்து அவரும் இணைந்து மீண்டும் பார்த்தார். நீங்கள் படம் குறித்து பகுப்பாய்வு செய்து எங்களுடன் 10 நிமிடங்கள் செலவிட்டீர்கள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.  இதானால் நீங்கள் கூறியது போல் நான் உலகில் முதலிடத்தில் இருக்கிறேன். உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்என்று குறிப்பிட்டிருந்தார்.

The great James Cameron watched RRR.. He liked it so much that he recommended to his wife Suzy and watched it again with her.🙏🏻🙏🏻

Sir I still cannot believe you spent a whole 10 minutes with us analyzing our movie. As you said I AM ON TOP OF THE WORLD... Thank you both 🥰🥰🤗🤗 pic.twitter.com/0EvZeoVrVa

— rajamouli ss (@ssrajamouli) January 16, 2023

மேலும் படத்தின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி அவர்களும் இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.அதில்,

“தலைசிறந்த இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் எங்களின் RRR படத்தை இரண்டு முறை பார்த்தார். அவர் எனது இசையமைப்பு குறித்து கருத்துக்களை தெரிவித்தார். நான் கடலளவு மகிழ்ச்சியடைகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்,    

The great James Cameron has watched RRR twice and gave feedback on my score !!! Ocean full of excitement ☺️☺️☺️ pic.twitter.com/3PrrhMUAIx

— mmkeeravaani (@mmkeeravaani) January 16, 2023

இதனையடுத்து இந்த பதிவுகளை ஆர் ஆர் ஆர் படத்தின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். 

கடந்த 2022 ல் வெளிவந்து இமாலய வெற்றியடைந்த படமான ஆர் ஆர் ஆர் திரைப்படம் பிரிட்டிஷ் எதிர்த்து இந்தியாவின் சுதந்திர போராட்ட காலத்தின் அடிப்படையில் இரண்டு தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.  இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து அலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஒலிவியா மோரிஸ், ஷ்ரியா சரண் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மீண்டும் இணைந்த கவின் – சாண்டி மாஸ்டர்  – surprise song இதோ..
சினிமா

மீண்டும் இணைந்த கவின் – சாண்டி மாஸ்டர் – surprise song இதோ..

பாலிவுட்டில் கெத்து காட்டும் விஜய் சேதுபதி – வெளியானது ஃபர்ஸி தொடர் டிரைலர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

பாலிவுட்டில் கெத்து காட்டும் விஜய் சேதுபதி – வெளியானது ஃபர்ஸி தொடர் டிரைலர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

நான் நல்லாத்தான் யா இருக்கேன்! – வதந்திக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி ஹாசன்..
சினிமா

நான் நல்லாத்தான் யா இருக்கேன்! – வதந்திக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி ஹாசன்..