தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்து நடித்து கடந்த ஆண்டு (2021) தீபாவளி வெளியீடாக நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசான ஜெய்பீம் திரைப்படம் உலகெங்கும் பல ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. மேலும் சர்வதேச அரங்கில் பலரது பாராட்டுகளையும் பெற்றது.

மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த அநீதிகளை மையப்படுத்திய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமொள் ஜோஸ், ரஜீஷா விஜயன், பிரகாஷ்ராஜ், குரு சோமசுந்தரம், MS.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு S.R.கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

முன்னதாக உலக அரங்கில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. மேலும் ஆஸ்கார் விருதுக்கான முதற்கட்ட தேர்வு பட்டியல் வரை ஜெய் பீம் திரைப்படம் முன்னேறியது. இதையடுத்து ஆஸ்கார் தேர்வு குழுவில் இணையும் படி சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த மாதம் சீனாவில் நடைபெறும் 12-வது பீஜிங் சர்வதேச திரைப்பட விழாவின் டைன்டன் விருதுகளுக்கு ஜெய் பீம் திரைப்படம் தகுதி பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பீஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் திரைப்படம் விருதுகளை வெல்ல படக்குழுவினருக்கு கலாட்டா குழுமம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.
 

Official selection for the Tiantan Awards at the 12th Beijing International Film Festival - #JaiBhim 🔥@Suriya_offl #Jyotika @rajsekarpandian @primevideoin @prakashraaj @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit @rajisha_vijayan #Manikandan @jose_lijomol pic.twitter.com/sRDjIkR7CU

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 29, 2022