குற்றம் குற்றமே படத்தின் மாமன் மகளே பாடல் வீடியோ வெளியீடு!
By Anand S | Galatta | April 22, 2022 21:28 PM IST
தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, பட்டாம்பூச்சி என வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. மேலும் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் கலகலப்பு-2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சுர்தர்.C இயக்கத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக ஜெய் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த குற்றம் குற்றமே திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் காலை 10.30am மணிக்கு ரிலீஸானது.
D கம்பனி தயாரிப்பில் AXESS ஃபிலிம் ஃபேக்டரி வழங்கிய குற்றம் குற்றமே திரைப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, ஜெய் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க காளி வெங்கட் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் அஜிஷ் இசை அமைத்துள்ள குற்றம் குற்றமே படத்திற்கு மு.காசிவிசுவநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் குற்றம் குற்றமே திரைப்படத்திலிருந்து மாமன் மகளே பாடல் வீடியோ தற்போது வெளியானது. ரொமான்டிக்கான அந்த பாடல் வீடியோ இதோ…