கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

Jagamethandhiram

லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. தனுஷ் கிடா மீசையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி அசத்தியது. பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். படத்தின் விநியோக பங்குதாரராக ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. 

Dhanush

படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. மே மாதம் 1-ம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் முதல் சிங்கிளை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது பிறந்தநாளான நேற்று கலாட்டா குழுவிற்கு கூறியுள்ளார்.