பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்,இந்த படத்தில் கலையரசன்,மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்,சஞ்சனா நடராஜன்,ஜேம்ஸ் காஸ்மோ,அஸ்வந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு ஜகமே தந்திரம் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படம் கொரோனா காரணமாக நேரடியாக  Netflix தளத்தில் இன்று வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.படத்தின் ரிலீஸை முன்னிட்டு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்திற்கும் கதாபாத்திரத்துக்கும் நன்றி என்று கார்த்திக் சுப்புராஜிடம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ் நீங்கள் இல்லை என்றால் படமும் சுருளி என்ற கதாபாத்திரமும் இவ்வளவு பெரிதாக வந்திருக்காது என்று தனுஷிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.இவர்களது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.