சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

Isha Koppikar About Sivakarthikeyan Ayalaan

யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது.

Isha Koppikar About Sivakarthikeyan Ayalaan

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இஷா கோபிகார் ரசிகர்களுடனான லைவ்வில் சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார்.சிவகார்த்திகேயன் மிகவும் கூலான நபர் என்றும் எந்த பந்தாவும் இல்லாமல் பழகும் நபர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.