விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று கனா காணும் காலங்கள்.சீரியல் பார்ப்பவர்களை தவிர அனைவரையும் கவரும் வண்ணம் இந்த தொடர் இருந்தது.90ஸ் கிட்ஸின் பெரிய Favourite தொடர்களில் இதுவும் ஒன்றாக இன்றும் இருக்கிறது.இந்த தொடரை இன்றும் மறுஒளிபரப்பு செய்யச்சொல்லி பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

முதல் சீசனில் பள்ளி வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிபரப்பான இந்த தொடர் வயது வித்தியசமின்றி அனைவரையும் கவர்ந்திருந்தது.பள்ளி வாழ்க்கையில் நடக்கும் ரகளைகள் போன்றவற்றை வைத்து இளைஞர்களை கவரும் வண்ணம் இந்த தொடர் உருவாக்கப்பட்டது.

இந்த தொடரின் பெரிய வரவேற்பை தொடர்ந்து கல்லூரி கதையாகவும் விஜய் டிவி இதனை தொடர்ந்து எடுத்தனர்.கல்லூரி கதைக்களத்தில் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பப்பட்டது இந்த தொடர்.இந்த தொடரில் நடித்த நட்சத்திரங்கள் பலரும் சின்னத்திரையிலும்,வெள்ளித்திரையிலும் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து இந்த தொடரின் புதிய சீசன் ஏப்ரல் 22ஆம் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் நடித்து அசத்தி வருகின்றனர்.இந்த தொடரில் தற்போது கனா காணும் காலங்கள் முதல் சீசனில் ஹீரோவாக நடித்த இர்பான் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் என்ட்ரி தருகிறார்.இதுகுறித்த ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.