வித்தியாசம் என்ற பெயருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துவரும் இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன்.இவரது படங்கள் எப்போதும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டம்,மேக்கிங் என்று ஏதேனும் ஒன்றை பெற்றிருக்கும்.இவர் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று பல விருதுகளை தட்டி சென்றது.

இந்த படத்தின் பாலிவுட் ரீமேக் விரைவில் வெளியாகவுள்ளது இதனையும் பார்த்திபன் இயக்கியுள்ளார்.இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் துருவ நட்சத்திரம்,பொன்னியின் செல்வன் என மெகா பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்கள் வெகு விரைவில் வெளியாகவுள்ளன.

ஒத்த செருப்பு படத்தினை தொடர்ந்து மீண்டும் வித்தியாச முயற்சியாக சிங்கிள் ஷாட்டில் ஒரு படத்தினை எடுத்துள்ளார் பார்த்திபன்.இரவின் நிழல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.வரலக்ஷ்மி சரத்குமார்,பிரிகிடா சகா,ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் வித்தியாசமான டீஸர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளது.இந்த டீஸரை கீழே உள்ள லிங்கில் காணலாம்