பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் அடுத்ததாக தயாரிக்கும் படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஆனந்தி, ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர்.

attakathidinesh attakathidinesh

இவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள். மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குகிறார்.

gundu

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. டென்மா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். தற்போது படத்தின் சென்சார் விவரம் தெரியவந்தது. இப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டது. நிச்சயம் இப்படம் திரை விரும்பிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.