கடந்த சில வருடங்களாக சமூகவலைத்தளங்களின் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.தங்கள் திறமையை அவர்களுடைய பக்கங்களில் வெளிப்படுத்தி பலரும் பலனடைந்துள்ளனர்.அப்படி பல நடிகர்கள் நடிகைகளை மற்றும் திறமையான படைப்பாளர்கள் படக்குழுவினர்,நடனக்கலைஞர்கள் என பலரை உருவாகியுள்ளது இந்த சோசியல் மீடியா.

நடனத்தின் மீதும் அதீத பிரியம் கொண்டவர் சிந்துஜா ஹரி.காலேஜ் காலங்களிலேயே நடனத்தில் அசத்தி வந்த இவர் அடுத்ததாக தன்னுடைய நடன வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவராக மாறினார் சிந்துஜா.

தனது டான்ஸ் ஸ்டுடியோவை நண்பர்களுடன் இணைந்து தொடங்கி அதன் மூலம் பலருக்கும் நடனத்தை கற்றுக்கொடுத்தும் வருகிறார்.இவர் நடனமமைத்த பல வீடியோக்கள் இன்ஸ்டாகிராமிலும்,யூடியூப்பிலும் மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றன.தற்போது தனது பெரியதிரை என்ட்ரியை அஷ்வின் நடித்துள்ள என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் கொடுக்க உள்ளார்.

சமீபத்தில் ரிலீசான உருட்டு என்ற பாடல் மூலம் டான்ஸராக தனது பெரிய திரை என்ட்ரியை கொடுக்கவுள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக இவர் வெள்ளித்திரையில் அசத்தி நடனக்கலைஞராக மட்டுமல்லாமல் டான்ஸ் மாஸ்டராகவும் அசத்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

instagram sensation sindhuja hari movie debut with ashwin enna solla pogirai