உலகப் புகழ்பெற்ற பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான சர்வைவர் நிகழ்ச்சி தற்போது தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்ற சர்வைவர் நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சி வழங்க, ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.

சர்வைவர் நிகழ்ச்சியில் இந்திரஜா,லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி,பெசன்ட் நகர் ரவி,அம்ஜத்கான், நந்தா,லக்கி நாராயணன்,ஐஸ்வர்யா,சரண் சக்தி, விக்ராந்த்,விஜயலக்ஷ்மி,ராம்,உமாபதி ராமையா, லேடி காஷ், காயத்ரி ரெட்டி,VJ பார்வதி , ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்கினர்.

போட்டியாளர்கள் காடர்கள் & வேடர்கள் என இரு அணிகளாக இருக்கின்றனர். பரபரப்பாக நடைபெற்று வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் முன்னதாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே முதலாவதாக வெளியேற, அவரைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகை இந்திரஜா சங்கர் வெளியேறினார். இந்நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக புதிய போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர்.

சென்னை 600028, சுந்தரபாண்டியன், ரம்மி, அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் இனிகோ பிரபாகரன் மற்றும் பிரபல மாடல் வனேசா க்ரூஸ் ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சர்வரில் இணைந்துள்ளனர். வனேசா க்ரூஸ் காடர்கள் அணியிலும் இனிகோ பிரபாகரன் வேடர்கள் அணியிலும் இணைய அனல்பறக்கும் சர்வைவர் தொடர்கிறது.