கடந்த 2015-ம் ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் ஆகியோரின் நடித்திருந்தனர். இதன் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் இன்று நேற்று நாளை படத்தின் 2-வது பாகத்தை தயாரிப்பதாக திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

IndruNettruNaalai2

இந்த இரண்டாவது பாகத்தை ரவிக்குமாரின் உதவி இயக்குனரான கார்த்திக் இயக்குவார் என்றும், நடிகர்கள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் செய்தி வெளியானது. இதுகுறித்த ரசிகரின் கேள்விக்கு திருக்குமரன் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளிதுள்ளது. 

indrunetrunaalai2

சிவகார்திகேயன் நடிக்கும் அயலான் படத்தை இயக்கும் பணிகளில் இயக்குனர் ரவிக்குமார் பிஸியாக இருந்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது எனவும் ஸ்கிரிப்ட் மிகவும் நன்றாக வந்திருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.