நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக காடன் படம் வெளியானது. பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ராணாவுடன் இணைந்து நடித்திருந்தார் விஷ்ணு விஷால். சமீபத்தில் தனது திருமண பத்திரிகையை ரசிகர்களுடன் பகிர்ந்தார். இம்மாதம் ஏப்ரல் 22-ம் தேதி பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை கரம் பிடிக்கிறார். 

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் மோகன்தாஸ். படத்தின் டீஸர் சென்ற மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதில் விஷ்ணு சைக்கோ கொலைகாரனாக காட்டப்பட்டு இருந்தார். மோகன்தாஸ் படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. டீஸரில் ஒருவரை சுத்தியலால் அடித்து.. அடித்து.. பல முறை அடித்து.. கொலை செய்கிறார். அதன் பிறகு ரத்தம் சொட்ட சொட்ட அதே சுத்தியை தூக்கி சென்று கண்ணாடி முன்னர் நிற்கிறார். 

அங்கு சட்டையை கழற்றிவிட்டு ரத்தத்தை தன் உடம்பில் தேய்த்து கொண்டு, அதன் பிறகு சட்டையை அப்படியே எடுத்துச்சென்று வாஷிங் மெஷினில் துவைக்கிறார். இது உண்மை கதையாக இருக்கலாம் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

விஷ்ணு தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தான் மோகன்தாஸ் படத்தை தயாரிக்கிறார். கொரோனா லாக்டவுனால் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் இந்திரஜித் சுகுமாரன் தனது காட்சிகளை நிறைவு செய்துள்ளாராம். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாகவும் விஷ்ணு பதிவு செய்துள்ளார். 

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.