பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா எனும் கேரக்டரில் நடித்த பிரபலமாகியவர் இந்திரஜா சங்கர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமுண்டு. நடிப்பு, நடனம் என தந்தை ரோபோ சங்கர் போல் பட்டையை கிளப்புகிறார். இவர் செய்யும் டிக்டாக் வீடியோக்கள் இணையத்தை அசத்தி வருகிறது. 

Indraja Shankars Imitates Comedy Scene In Tiktok

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியக் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் தங்களின் பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

Indraja Shankars Imitates Comedy Scene In Tiktok

இந்நிலையில் இந்திரஜா டிக்டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கிரி படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை வசனத்தை பேசி தந்தையுடன் இணைந்து டிக்டாக் செய்துள்ளார். அர்ஜுன் நடிப்பில் வெளியான கிரி படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை ஏராளம். குறிப்பாக பாக்ஸிங் கற்றுத்தரும் காட்சி மறக்கவே முடியாத ஒன்று. அந்த காட்சியை கண்முன் நிறுத்தியுள்ளார் இந்திரஜா. 

@indraja_sankar

hanumar vaiiii🤣. thalaiva u r great🙏.endha vaarathin mudhal tiktok♥️@priyarobo @karthicktk @kpy_ameer_santhanam @prince_rozario

♬ original sound - govinmaz