தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த “ஆடுகளம்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை டாப்சி தமிழில் நடிகர் ஜீவாவின்  வந்தான் வென்றான் நடிகர் அஜித்  நடித்த ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களில்  நடித்துள்ளார்.

பாலிவுட்டில் நுழைந்த நடிகை டாப்சி நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த “பின்க்” திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து அவர் நடித்த கேம் ஓவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பாலிவுட்டில் தி காசி அட்டாக் ,மிஷன் மங்கள், தப்பட் நடித்து வந்த நடிகர் தாப்ஸி நடிப்பில்  அடுத்ததாக ஹஸீன் தில்ருபா என்ற புதிய பாலிவுட் திரைப்படம்  வெளிவரவுள்ளது.

இந்தியாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஆனந்த் எல் ராய் தயாரிக்கும் ஹஸீன் தில்ரூபா திரைப்படத்தை இயக்குனர் அமித் திரிவேதி இயக்குகிறார். நடிகை டாப்ஸி உடன் இணைந்து விக்ரண்ட் மஸ்சே, ஹர்ஷவர்தன் ராணே நடித்துள்ளனர். முன்னதாக திரைப்படம் நேரடியாக NETFLIX OTT தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று  “ஹஸீன் தில்ரூபா”  திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த டீசரில்  ஹஸீன் தில்ரூபா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.வருகிற ஜூலை 2ஆம் தேதி நேரடியாக NETFLIX OTT தளத்தில்  ஹஸீன் தில்ரூபா திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.