பாலிவுட்டில் ஃபக்லி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கயரா அத்வானி தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக இவர் நடித்து வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைய வைத்தது. 

தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிகை கயரா அத்வானி நடித்த பரத் என்னும் நான் திரைப்படம் தென்னிந்திய அளவில் இவரை முன்னணி நடிகையாக உயர்த்தியது. மறைந்த நடிகர் சுஷன்ட் சிங் ராஜ்புட் நடித்த எம்எஸ் தோனி தி அண்டோல்டு ஸ்டோரி என்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பயோபிக் திரைப்படத்தில் தோனியின் மனைவி சாக்ஷி கதாபாத்திரத்தில் நடிகை கயரா அத்வானி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்  திரைப்படத்தில் நடிகை அக்ஷய் குமாருடன் இணைந்து நடிகை கயரா அத்வானி நடித்த லக்ஷ்மி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது நடிகை கயரா அத்வானி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

முக கவசம் அணிந்தபடி உடற்பயிற்சியில் ஈடுபடும் கயரா அத்வானி உடலை சுழற்றி கிக் செய்து அருகில் இருக்கும் நபரின் தலையில் இருக்கும் தொப்பியை மட்டும் உதைத்து தள்ளும் அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)