ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரும்,ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமாக இருந்தவர் டேவிட் வார்னர்.இவரது அதிரடி ஆட்டத்துக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.சன் ரைஸர்ஸ் அணியின் கேப்டனாக வார்னர் அசத்தி வருகிறார்.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு கடந்த 6 மாதங்களாக வீட்டிலேயே இருந்து வந்தனர்.இந்த நேரத்தில் டேவிட் வார்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்து டிக்டாக் விடீயோக்களை வெளியிட்டு வந்தார்.இதில் இவர் அல்லு அர்ஜுனின் சமீபத்திய ஹிட் பாடலான புட்டபொம்மா பாடலுக்கு நடனமாடிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆனது.

சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் கூட இவரை நடனமாட சொல்லி பல ரசிகர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.தனது பிறந்தநாள் அன்று நடந்த ஒரு போட்டி ஜெயித்து விட்டு சன்ரைஸர்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் இவர் புட்டபொம்மா பாடலுக்கு நடனமாடும் வீடீயோவை அணி நிர்வாகம் பதிவிட்டனர்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது.முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றியது.இரண்டு ஒரு நாள் போட்டியில் வார்னர் காயம் காரணமாக பாதியில் விலகி தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

மூன்றாவது ஒரு நாள் போட்டி மற்றும் முதல் twenty 20 போட்டி என்று இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.வார்னர் காயம் குணமடைந்ததும் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.முதலில் ஆக்ரோஷ ஆட்டக்காராக அறிமுகமாகி அனைவருடனும் சண்டையிட்டு வந்த வார்னர் தற்போது ரசிகர்களிடம் உரையாடுவது,டிக்டாக் செய்வது என்று செம ஜாலியாக இருந்து வருகிறார்.நிவர் புயலின்போது சென்னை மக்கள் பத்திரமாக இருக்கவும் இவர் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டார்.சமீபத்தில் சூர்யாவின் 24 படத்தின் ஒரு காட்சியை தனது முகத்தை மாற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இன்டர்நெட் சென்ஸேஷன்களில் ஒருவர் வணக்கம் டா மாப்ள புகழ் அருண்குமார்.இவரது வீடியோக்கள் பல சமூகவலைத்தளங்களில் குறிப்பாக டிக் டாக்கில் செம பேமஸாக இருந்தன.தற்போது இவரது புகைப்படத்தில் வார்னரை ரசிகர் ஒருவர் வரைந்துள்ளார்.இந்த புகைப்படத்தில் வார்னர் அப்படியே செட் ஆகி போக ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

A post shared by David Warner (@davidwarner31)