விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருந்தது.இந்த தொடரை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் ராம்பாலா.சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சில வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்தனத்துடன் இணைந்து தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார்.இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்திருந்தது.

இதனை தொடர்ந்து தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார் ராம்பாலா.இந்த படமும் ஒரு ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ளது.ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இடியட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.அகிலஉலக சூப்பர்ஸ்டார் மிர்ச்சி சிவா இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

நிக்கி கல்ராணி இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்ளில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்த ட்ரைலரை கீழே உள்ள லுங்கில் காணலாம்