கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பெரிய ஹிட் தொடர்களில் ஒன்று இதயத்தை திருடாதே..இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரின் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நவீன்.ஹிமா பிந்து இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த தொடரில் தனது நடிப்பால் அசத்திய நவீன் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.இந்த தொடரில் நடித்து வரும் நாயகியுடன் நவீன் காதல்வயப்பட்டுள்ளார் விரைவில் திருமணம் சீரியலில் இருந்து விளக்கவுள்ளார் என்றெல்லாம் பல தகவல்கள் பரவி வந்தன.சில தினங்களுக்கு முன்  எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்தார்.

இது நிச்சயம் இவரது திருமணம் குறித்த செய்தியாக இருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக தனது வருங்கால மனைவியை அறிமுகப்படுத்தினார் நவீன்.

சன் நியூஸ் தொலைக்காட்சியில் பிரபலமான செய்தி வாசிப்பாளராக இருந்து வருபவர் கண்மணி சேகர்.செய்தி வாசிப்பாளராக மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் அசத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.அவருடன் சில புகைப்படங்களை பகிர்ந்த நவீன் தனது வருங்கால மனைவி இவர் தான் என்பதை உறுதி செய்துள்ளார்.விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ள இந்த ஜோடிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.