2013-ல் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படங்களில் ஒன்று இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.விஜய் சேதுபதி,அஸ்வின்,நந்திதா சுவேதா,ஸ்வாதி உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

Idharku Thaane Aasaipattai Balakumara Sequel work

கோகுல் இந்த படத்தை இயக்கியிருந்தார்.சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்ற தகவலை இசையமைப்பாளர் சித்தார்த் விபின் தெரிவித்துள்ளார்.

Idharku Thaane Aasaipattai Balakumara Sequel work

கலாட்டாவுடனான லைவ்வில் இதனை தெரிவித்த சித்தார்த் விபின்,இந்த படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டதாக இயக்குனர் தெரிவித்துள்ளார் என்றும் சென்னை வந்ததும் படத்தின் வேளைகளில் இணைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Idharku Thaane Aasaipattai Balakumara Sequel work

இந்த படத்தில் பெரிதும் ரசிக்கப்பட்டது விஜய்சேதுபதி வரும் காட்சிகள் தான்.எனவே அவர் இந்த படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த சித்தார்த் விபின்,அதுகுறித்த தகவல் இன்னும் தெரியவில்லை இன்றைய தேதியில் விஜய்சேதுபதி மிகவும் பிஸியான ஒரு நடிகர் எனவே அதுகுறித்து இயக்குனர் தான் தெரிவிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.