விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் 3-வது வாரத்தில் கேப்டனாக சிபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அபிஷேக், பாவனி, பிரியங்கா, ஐக்கி பெர்ரி, இசைவாணி, சின்னபொண்ணு, அபினய், அக்ஷரா மற்றும் தாமரை செல்வி ஆகியோர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக பஞ்ச நாணயம் டாஸ்க் தொடங்கியது. இதில் நாணயங்களை கைப்பற்றி வெற்றி பெறும் போட்டியாளர் தன்னையோ அல்லது தான் விரும்பும் ஒரு போட்டியாளரையோ எலிமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்.

அந்த வகையில் இரவு பகலாக நடைபெறும் டாஸ்க்கில் நாணயங்களை கைப்பற்றுவதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் மும்முரமாக விளையாடி வருகின்றனர். மேலும் நேற்று (அக்டோபர் 20) நிரூப், பிரியங்கா மற்றும் சுருதி நாணயத்தை எடுக்கும்போது மாட்டிக்கொண்டதால் முதல் முறையாக பாதாள சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் இன்றும் (அக்டோபர் 21) தொடரும் இந்த டாஸ்க்கில் முன்னதாக எப்படியாவது நாணயத்தை கைப்பற்றும் முனைப்பில் அபிஷேக் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் மாற்றி மாற்றி பேசி அவர்களுக்குள் கொளுத்திப் போட முயற்சிக்கும் ப்ரோமோ வெளியான நிலையில், சற்றுமுன்  அபிஷேக்கை மற்ற போட்டியாளர்கள் பந்தாடும் புதிய ப்ரோமோ வெளியானது. கலகலப்பான அந்த ப்ரோமோ இதோ...