இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

HipHop Thamizha Adhi Movie Titled Naan Sirithaal

இந்த இரண்டு படங்களையுமே இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார்.தமிழ் படம் 2வில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

HipHop Thamizha Adhi Movie Titled Naan Sirithaal

இந்த படத்தையும் இயக்குனர் சுந்தர் சி தயாரிக்க உள்ளார்.இந்த படத்திற்கு நான் சிரித்தால் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.