பூஜையுடன் ஷூட்டிங்கை தொடங்கிய ஹிப்ஹாப் தமிழாவின் வீரன் !
By Aravind Selvam | Galatta | May 25, 2022 14:26 PM IST
இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.ஆல்பம் பாடல்களில் ஆரம்பித்த இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.இதனை தொடர்ந்து இவர் இசையமைத்த பல படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.அடுத்ததாக தனது வாழ்க்கையையே மையமாக வைத்து இவர் எடுத்த படம் மீசைய முறுக்கு.
இந்த படத்தின் மூலம் நடிகராகவும்,இயக்குனராகவும் களமிறங்கினார் ஆதி.இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் நட்பே துணை,நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக உருவெடுத்தார்.ஹீரோவானாலும் தொடர்ந்து வேறு படங்களுக்கு இசையமைப்பதையும் தொடர்ந்து வந்தார்.
இவர் நடித்த சிவகுமாரின் சபதம்,அன்பறிவு படங்கள் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தன.இதனை அடுத்து இவர் மரகத நாணயம் பட இயக்குனர் ARK சரவண் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.இந்த படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.
இந்த படம் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது அதற்கு பிறகு எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது என்றும் இந்த படத்திற்கு வீரன் என்று பெயரிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் தெரிவித்துள்ளனர்.
We’re very happy to announce our next film with @hiphoptamizha, directed by Maragadha Naanayam fame @ArkSaravan_Dir titled #VEERAN⚡shooting begins today ! Need all your wishes😀 🙏
— Sathya Jyothi Films (@SathyaJyothi) May 25, 2022
A @hiphoptamizha Musical
Dop @deepakdmenon
Editor @editor_prasanna pic.twitter.com/TCKRVFZbAA
Back to shoot after nearly 6 months of preparation ♥ This one is going to be bigger 💪 Thank you all for patiently waiting and supporting #Veeran தயாராகிறான். 🙌 pic.twitter.com/1LlLQVMuue
— Hiphop Tamizha (@hiphoptamizha) May 25, 2022
Madura Veeran Trailer Review - Jallikattu All The Way
01/01/2018 06:38 PM
Sivakarthikeyan Steps Up For Madura Veeran
01/01/2018 01:13 PM
Madura Veeran 'Un Nenjukulle' video song review
26/12/2017 06:31 PM
Sasikumar Should Pay the Debt to Release Kodi Veeran
29/11/2017 05:33 PM