பட்டையை கிளப்பும் மீசைய முறுக்கு படக்குழுவினர் புதிய வீடியோ !
By Aravind Selvam | Galatta | July 21, 2020 21:08 PM IST
இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.கனவுகளோடு இருந்த ஒரு மிடில் கிளாஸ் மனிதன் இன்று பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்படும் இசை நாயகனானாக மாறியுள்ளார்.ஆல்பம் பாடல்களில் ஆரம்பித்த இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.இதனை தொடர்ந்து இவர் இசையமைத்த இன்று நேற்று நாளை,இமைக்கா நொடிகள்,கதகளி என்று பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருந்தார்.
இதற்கு இடையில் தனது வாழ்க்கையையே மையமாக வைத்து இவர் எடுத்த படம் மீசைய முறுக்கு.இந்த படத்தின் மூலம் நடிகராகவும்,இயக்குனராகவும் களமிறங்கினார் ஆதி.சுந்தர் சி இந்த படத்தை தயாரிக்க.இந்த படம் இளைஞர்களின் மனம் கவர்ந்த படமாக ஒரு கொண்டாட்டமாக அமைந்தது.நடிப்பதில் இறங்கினாலும் இசை மீது கொண்டுள்ள காதலை விடமால் படங்களுக்கு இசையமைத்து வந்தார்.
இதனை தொடர்ந்து இவர் நட்பே துணை,நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக உருவெடுத்தார்.இன்றுடன் இவர் இயக்கி நடித்த மீசைய முறுக்கு திரைப்படம் வெளியாகி மூன்றாம் ஆண்டு நிறைவடைகிறது.ஆத்மீகா இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.RJ விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பல யூடியூப் பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை ஒட்டி படக்குழுவினர் ஒரு சிறப்பு வீடீயோவை வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களின் மனம் கவர்ந்த டயலாக்குகள் ,மாஸ் காட்சிகள்,சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளிட்டவற்றை அனைத்தையும் சேர்த்து ரசிகர்கள் ரசிக்கும் படி இந்த வீடீயோவை செய்துள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
WOW: Great news for Money Heist Fans - Professor is back with a bang! Check Out!
21/07/2020 06:27 PM
Cobra director's special message for Arulnithi's next film
21/07/2020 05:54 PM
Papanasam and Bairavaa actor to enter wedlock during lockdown!
21/07/2020 05:22 PM