இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.ஆல்பம் பாடல்களில் ஆரம்பித்த இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.இதனை தொடர்ந்து இவர் இசையமைத்த பல படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.அடுத்ததாக தனது வாழ்க்கையையே மையமாக வைத்து இவர் எடுத்த படம் மீசைய முறுக்கு.

இந்த படத்தின் மூலம் நடிகராகவும்,இயக்குனராகவும் களமிறங்கினார் ஆதி.இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் நட்பே துணை,நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக உருவெடுத்தார்.ஹீரோவானாலும் தொடர்ந்து வேறு படங்களுக்கு இசையமைப்பதையும் தொடர்ந்து வந்தார்.

இவர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அஷ்வின் ராம் இயக்கத்தில் உருவான அன்பறிவு படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஜனவரி 7ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்து பிரபலமான காஷ்மீரா,ஷிவானி ராஜசேகர் இந்த படத்தின் நாயகியாகளாக நடித்துள்ளார்.

நெப்போலியன்,விதார்த்,தீனா என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான அரக்கியே என்ற பாடல் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்