தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தன்னை செதுக்கி கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. மீசைய முறுக்கு படத்தில் அறிமுகமாகியவர் அதன் பின் நட்பே துணை படத்தில் நடித்தார். இவரது எதார்த்த நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த ஆண்டு இவர் நடிப்பில் நான் சிரித்தால் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

Hiphop Aadhi Teaches School Students Over Video Call

இந்நிலையில் ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கோபிச்செட்டிப்பாளையம் SVISSS பள்ளி மாணவர்களுக்கு தமிழி ஆவணப்படம் இணையவழியில் திரையிடப்பட்டதுடன், கலந்துரையாடலும் நடைபெற்றது. கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பு தொடர்பான அறிதலை ஏற்படுத்த வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகத்திற்கு தமிழன்டா இயக்கம் சார்பில் நன்றிகள் என பதிவிட்டுள்ளார். 

Hiphop Aadhi Teaches School Students Over Video Call

ஹிப்ஹாப் ஆதியின் இந்த கலந்துரையாடல் நிகழ்வுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாடலில் மட்டும் தமிழன்டா என்று கூறாமல் நிஜத்திலும் தனது செயல்களின் மூலம் அதை சாத்தியமாக்கும் ஆதியை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.