ரசிகர்களை மகிழ்விப்பதில் பல கருவிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.அதில் மிகமுக்கியமான ஒன்று படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள்.இந்தியா முழுவதும் பல மொழிகளில் பல நிகழ்ச்சிகளும்,தொடர்களும் ஹிட் அடித்து வரும்.

ஹிந்தியின் மிகப்பெரிய ஹிட் தொடர்களில் ஒன்று நாகினி.ஹிந்தியில் பெரிய ஹிட் அடித்த இந்த தொடர் அடுத்ததாக இந்தியா முழுவதும் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.டப் செய்யப்பட்ட இந்த தொடர் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் செம ஹிட் அடித்தது.

சில பல சீசண்கள் கடந்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.ஹிந்தியில் Phir Laut Aayi Naagin என்ற பெயரில் ஒளிபரப்பான முதல் சீசன் , 2019 முதல் 2020 வரை ஒளிபரப்பாகி வந்தது,இதில் ஹீரோயினாக நடித்து அசத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிகிதா ஷர்மா.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது இவருக்கு Rohandeep Singh என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது என்ற தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.