இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

HHT3 Naan Sirithal First Single To Release Soon

இந்த இரண்டு படங்களையுமே இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார்.ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

HHT3 Naan Sirithal First Single To Release Soon

நான் சிரித்தால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினையும் இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.தற்போது இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியாகும் என்று ஹிப்ஹாப் தமிழா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்