தமிழ் திரையுலகில் பல ஹீரோ ஹீரோயின்களை தனது நடன இயக்கத்தால் இயக்கியவர் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. பல வெற்றி படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். தற்போது நடிகர் துல்கர் சல்மான் வைத்து ஹே சினாமிகா என்ற படத்தை இயக்கவுள்ளார். பிருந்தா இயக்குனராக களமிறங்கும் முதல் படம் இதுதான். 

Heysinamika

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக தகவல் தெரியவந்தது. அதிதி ராவ் ஹைதாரி முக்கிய ரோலில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 96 புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். வானம் கொட்டட்டும் படத்தில் தனது ஒளிப்பதிவு மூலம் ஈர்த்த ப்ரீதா ஜெயராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Heysinamika

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால், அரசாங்க அறிவுறுத்தலுக்கு இணங்க ஹே சினாமிகா படப்பிடிப்பு வேலைகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டது.