தமிழ் திரையுலகில் இதுவரை பெரிதும் பயன்படுத்தாத கதைக்களத்தை தேர்ந்தெடுத்து பி.ஸ்.மித்ரன் இயக்கிவரும் ஹீரோ படத்தில்,நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் வீடியோ கேமினை படக்குழுவினர் கூகுள் பிலேஸ்டோர் மற்றும் ஐஒஸ்-ல் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

Hero Team Plays Play Hero Game Sivakarthikeyan

கேம் வெளியீட்டை தொடர்ந்து மக்களிடையே நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது.தற்பொழுது இந்த கேம்-ஐ சிவகார்த்திகேயன்,கல்யாணி பிரியன் ,இவானா மற்றும் நடனஇயக்குனர் சதிஷ் ஆகியோர் விளையாடும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Hero Team Plays Play Hero Game Sivakarthikeyan

யுவனின் இசையில் வெளியான சிங்கள் ட்ராக் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நவம்பர் 29-ல் படத்தின் சேகென்ட் ட்ராக் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கின்றனர். ஹீரோ திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளிவருவதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.