நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ஹீரோ. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் இரும்புத்திரை புகழ் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

hero hero

இவர்களுடன் நாச்சியார் புகழ் நடிகை இவானா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபே டியோல் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

sivakarthikeyan

தற்போது இப்படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகும் என்று நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தகவல் தெரியவந்ததது. அன்றே ட்ரைலரும் வெளியாகக்கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர்.20-ம் தேதி ரிலீசாகவுள்ளது என்பது கூடுதல் தகவல்.