ஜீவா நடித்த ரௌத்திரம் திரைப்படம் மூலம் திரையில் இயக்குனராக கால் பதித்தவர் கோகுல். விஜய் சேதுபதியை வைத்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜுங்கா போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். 

helenremake

பிசா கடையின் ஃப்ரீசர் ரூமில் மாட்டிக்கொள்ளும் பெண், உயிர் பிழைக்க நடத்திய போராட்டமும் அவளை தேடும் அப்பாவின் தவிப்புமே ஹெலன் படத்தின் கதைக்கரு. இத்திரைப்படத்தில் அப்பாவாக லால் நடித்திருந்தார். கும்பலங்கி நைட்ஸ் படத்தில் நடித்த அன்னா பென்னும் நடித்திருந்தனர். இந்நிலையில் ஹெலன் ரீமேக்கில் நிஜ அப்பா-மகளான அருண்பாண்டியனும் அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் நடிக்கின்றனர்.  

helen arunpandian

இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு ஹரிஷ் ராம் இயக்கிய தும்பா படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி பாண்டியன். கீர்த்தி பாண்டியனுக்கு இரண்டாம் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் இவரது ரசிகர்கள்.