கடின உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் மிகப்பெரிய அடையாளமாய் தமிழக மக்கள் மனதில் இருக்கும் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தி லெஜண்ட் சரவணன் அவர்கள், முன்னதாக தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் தானே நடித்து புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்தவர்.

இதனைத்தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கும் லெஜண்ட் சரவணன் அவர்கள் தி லெஜண்ட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ள தி லெஜண்ட் படத்தில் ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தி லெஜன்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜண்ட் திரைப்படம் கோபுரம் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் G.N.அன்புச்செழியன் அவர்கள் வெளியிட வருகிற ஜூலை 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

பிரமாண்டமாக ரிலீஸாக 2500 திரையரங்குகளில் ரிலீஸாகும் தி லெஜண்ட் திரைப்படம் பல முன்னணி திரையரங்குகளில் அதிகாலை முதல் காட்சியாக 4 மணி காட்சி திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தி லெஜண்ட் படத்திலிருந்து 6 பாடல்கள் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. 

இந்நிலையில், மேலும் போனஸாக திரைப்படத்தில் 3 பாடல்கள் இருக்கின்றன என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்து ஹாரிஸ் ஜெயராஜ் பதிவிட்ட ட்விட்டர் பதிவு இதோ…
 

Thanks to all the fans to attain 3 Crores views for the trailer of “The Legend”. Apart from 6 songs, I am delighted to present 3 more bonus tracks in the film. Hope you’ll all enjoy in theatres from 28th. pic.twitter.com/Oi6RSHG5ni

— Harris Jayaraj (@Jharrisjayaraj) July 24, 2022