தமிழ் திரையுலகில் இளம் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பியார் ப்ரேமா காதல், இஸ்பேடுராஜாவும் இதயராணியும் போன்ற படங்களால் இளைஞர்கள் விரும்பும் நாயகனாக திகழ்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ஊரடங்கு காரணமாக திரையரங்கில் ஓட முடியாமல் போனது, இருந்தாலும் ஆன்லைனில் வெளியாகி அசத்தலான வரவேற்பு கிடைத்தது.

Harish Kalyans Covid19 Awareness Video

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்கள் உடற்பயிற்சி, வீட்டு வேலைகள், நடனம், பாடல், சமையல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஊரடங்கால் படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் திரைத்துறை கடுமையான நெருக்கடியில் இருப்பதை கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்களின் நன்மைக்காக, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைப்பதாக சமீபத்தில் தெரிவித்தார்.  

Harish Kalyans Covid19 Awareness Video Harish Kalyans Covid19 Awareness Video
இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பணிக்கு செல்வோர்கள் தெர்மல் ஸ்கேனிங் செய்ய வேண்டும். கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது, எப்போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சோப்பு போட்டு கைகளை கழுவவேண்டும். கழிவறைகளில் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். யாருக்கும் கை கொடுக்காமல் வணக்கம் வைக்க பழக வேண்டும். அரசாங்கம் தரக்கூடிய விதிமுறைகளை கடைப்பிடித்தாலே இந்த கொரோனாவில் இருந்து விடுபடலாம் என அறிவுறுத்தியுள்ளார் ஹரிஷ் கல்யாண்.