தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண்.தொடர்ந்து இளைஞர்களை கவரும் வண்ணம் இவர் படங்கள் கொடுத்து வருகிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர்.

Harish kalyan Video Message on Reducing Salary

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தாராள பிரபு திரைப்படம் வெளியாகி விமர்சகர்களிடமும்,ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் உருவாகியுள்ள சில படங்கள் வெளியாகவுள்ளன.

Harish kalyan Video Message on Reducing Salary

கொரோனா காரணமாக தமிழ் திரையுலகம் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது.இதனை எதிர்கொள்ள சில நடிகர்,நடிகைகள்,தொழில்நுட்பக்கலைஞர்கள் தங்கள் சம்பளத்தை குறைப்பதாக தெரிவித்துள்ளனர்.இந்த வரிசையில் ஹரிஷ் கல்யாணும் தனது படங்களில் சம்பளத்தை குறைத்து கொள்வதாக ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.