ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஸ்டார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது. அதில் தளபதி ரஜினி கெட்டப்பில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தினார் ஹரிஷ் கல்யாண். இளன் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படம் இளம் ரசிகர்களால் பரவலாக கொண்டாடப்பட்டது. 

இளன் இயக்கிய இப்படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாணின் கதை தேர்வு நன்றாக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. இதன் பிறகு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு போன்ற படங்களை இளைய தலைமுறையினர் ரசிக்கும்படி ஹரிஷ் கல்யாண் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் தான் அவரது நடிப்பில் ஸ்டார் திரைப்படம் தொடங்கியிருக்கிறது. 

இந்நிலையில் ஸ்டார் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அதில் சிகப்பு ரோஜாக்கள் கமல் கெட்டப்பில் உள்ளார் ஹரிஷ் கல்யாண். சிகரெட், தொப்பி என ரெட்ரோ லுக்கில் ஹரிஷ் கல்யானை பார்த்த ரசிகர்கள் இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

படத்தில் இந்த கெட்டப் தொடர்பான காட்சிகள் உள்ளதா? என பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஸ்டார் எனும் படத்தின் தலைப்பு நாயகனை குறிப்பதால் நட்சத்திர கதாநாயகனை மையப்படுத்திய கதையம்சமாக ஸ்டார் இருக்கலாம் என தெரிகிறது.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் திரைத்துறை கடுமையான நெருக்கடியில் இருப்பதை கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்களின் நன்மைக்காக, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைப்பதாக தெரிவித்து அசத்தினார். 

ஹரிஷ் கல்யாண் கைவசம் ஓ மணப்பெண்ணே திரைப்படம் உள்ளது. இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பெல்லி சூப்புலூ படத்தின் தமிழ் ரீமேக்கும். இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கார்த்திக் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.