ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் தனுசு ராசி நேயர்களே.சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்துள்ளார்.

Harish Kalyan Priya Bhavani Shankar Pelli Choopulu

இந்த படத்தை இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார்.ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தையும் இவரே இயக்குகிறார்.தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Harish Kalyan Priya Bhavani Shankar Pelli Choopulu

தெலுங்கில் விஜய் தேவார்க்கொண்டா நடிப்பில் ரிலீசாகி வெற்றிபெற்ற பெல்லி சூப்புலு என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.கார்த்திக் சுந்தர் இயக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.