ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவனி ஷங்கர் படத்தின் ருசிகர தகவல் ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | September 30, 2020 17:25 PM IST

செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி படிப்படியாக சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வளர்ந்தவர் ப்ரியா பவானி ஷங்கர்.டிவியில் இருந்த போதே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் , தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வெற்றி நடிகையாக உருவெடுத்தார்.இதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர்,அருண் விஜயுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்த ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மனதில் ஒரு நல்ல நடிகையாகவும் இடம்பிடித்தார்.
இவர் நடிப்பில் வெளியான மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2,எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை,ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் pelli choopulu ரீமேக் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.ப்ரியா பவானி ஷங்கரும் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது,அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,சமூகப்பிரச்னைகளுக்
அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்வார் ப்ரியா.உடற்பயிற்சி குறித்தும் சில டிப்ஸ்களை ரசிகர்களுக்கு வழங்குவார் ப்ரியா பவானி ஷங்கர்.தற்போது ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இவர் நடித்துள்ள pelli choopulu தமிழ் ரீமேக்கின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை மாலை வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதனை விஜய் தேவரகொண்டா வெளியிடுவார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
Finally.. Happy for our team #ProductionNo2 ! Title & first look poster to be revealed by @TheDeverakonda & @TharunBhasckerD tomorrow at 5:40pm😉❤️#KarthikHeartsShruthi#LoveIsInTheAir@priya_Bshankar @KaarthikkSundar @krishnanvasant @Composer_Vishal pic.twitter.com/GTDuKVQZZH
— Harish Kalyan (@iamharishkalyan) September 30, 2020
Raghava Lawrence's Laxmmi Bomb to release in theatres in these countries!
30/09/2020 06:00 PM
BIG NEWS: Mani Ratnam officially reveals the first lyricist of Ponniyin Selvan!
30/09/2020 05:21 PM
Ka Pae Ranasingam TV spot promo | Aishwarya Rajesh | Vijay Sethupathi
30/09/2020 04:35 PM
Meena's latest PPE Outfit Pictures go viral on social media - check out!
30/09/2020 04:00 PM