கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக நேற்று (24-03-2020) நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதனால் மக்கள் வெளியில் வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு ஆதரவாக பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

HarbajanSingh Harbajan

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர், ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், Let me tweet a குட்டிstory, Pay attention listen2 நரேந்திர மோடி. தடைகளை உடைச்சு WorldCup, Oscarன்னு வாங்கின நமக்கு, கண்ணுக்குத் தெரியாத கொரோனா ஒரு சவால்.இதை 21 days of lock down ல் ஜெய்ச்சு உலகத்துக்கு முன்னாடி கெத்தா காலரதூக்குரதுக்காக  என்று பதிவு செய்துள்ளார். 

harbajansingh

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த குட்டி ஸ்டோரி பாடல் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த பாடலை அனைத்து தரப்பு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பெருமை ராக்ஸ்டார் அனிருத்தையே சேரும்.