தில்லுக்கு துட்டு 2,A1 என இரண்டு சூப்பர்ஹிட் படங்களில் வெற்றியோடு இந்த ஆண்டை துவங்கியுள்ளார் சந்தானம். இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய படத்தை பலூன் பட இயக்குனர் ஸ்ரீனிஷ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். 

Harbajan Singh Joins Cast of Santhanam Dikkiloona

கார்த்திக் யோகி இயக்கும் இந்த படத்திற்கு டிக்கிலோனா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என்றும்,இது டைம் ட்ராவல் சம்மந்தப்பட்ட படம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Harbajan Singh Joins Cast of Santhanam Dikkiloona

தற்போது இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும்,ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருபவருமான ஹர்பஜன் சிங் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Harbajan Singh Joins Cast of Santhanam Dikkiloona