XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது. 

ArthiGaneshkar

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

Ganeshkar

இந்நிலையில் நடிகை ஆர்த்தி தனது கணவர் கணேஷ்கரோடு இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். சத்தமா சிரிச்சுடுங்க... Come-on.. போர் அடிக்கிறவங்க கலாய்கலாம் என்று பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் அல்லாது படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர்.