தனுஷ் நடித்த மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, பிரியாணி, வாலு என பல படங்களில் நடித்தார். தற்போது STR உடன் தனது 50-வது படமான மஹா படத்தில் நடித்துள்ளார். 

Hansika Motwanis Drop Challenge Tiktok Video

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் உடற்பயிற்சி, சமையல், நடனம், பாடல் என வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலர் டிக்டாக்கில் பட்டையை கிளப்பி வருகின்றனர். 

Hansika Motwanis Drop Challenge Tiktok Video

இந்நிலையில் நடிகை ஹன்சிகா டிக்டாக்கில் ட்ராப் சேலஞ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். கூலிங் கிளாஸ் கண்ணாடியை அணிந்த படி நடனமாடிக்கொண்டு டிக்டாக் செய்துள்ளார். முதல் டேக் தவறிய போது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மஹா படத்தை தொடர்ந்து பார்ட்னர் படத்தில் நடிக்கவுள்ளார் ஹன்சிகா. 

@hansikamotwani

##clonesquad ##bloopers ##drop ##dropchallenge when take one was fail 😛##tiktok_india

♬ Banana (feat. Shaggy) - Conkarah