குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை ஹன்சிகா மோட்வானி நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் மை நேம் இஸ் ஸ்ருதி, பார்ட்னர், உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும்105 மினிட்ஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

இயக்குனர் விஜய் சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடித்துள்ள ஃபேண்டசி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் நடித்துள்ள MY3 வெப்சீரிஸ் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் MY3 வெப்சீரிஸ் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக இயக்குனர் J.M.ராஜ சரவணன் இயக்கத்தில் தயாராகும் ரவுடி பேபி திரைப்படத்தில் ஹன்சிகா தற்போது நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் R.கண்ணன் தனது தயாரிப்பு நிறுவனமான மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்கும் இத்திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து மெட்ரோ சிரிஷ் மற்றும் இரவின் நிழல் பட நடிகை பிரிகிடா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகும் இந்த புதிய திரைப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று அக்டோபர் 10ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த படப்பூஜை புகைப்படங்கள் இதோ…

We are happy to start our shooting of #ProductionNo10 from @MasalaPix starring @ihansika commenced Today❤💥😇

A Horror Comedy 💥
Produced & Directed by @Dir_kannanR@actor_shirish @Brigidasagaoffl @Dhananjayang @balasubramaniem @silvastunt @johnsoncinepro @digitallynow pic.twitter.com/r2sMt1HskM

— MasalaPix (@MasalaPix) October 10, 2022