குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் நடிகர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி ,சிங்கம் 2, மான் கராத்தே, அரண்மனை, புலி, போகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து ஹன்சிகா நடிப்பில் அடுத்தடுத்து பார்ட்னர், 105 மினிட்ஸ், மை நேம் இஸ் ஸ்ருதி, ரவுடி பேபி, கார்டியன் உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. மேலும் இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் MY3 எனும் வெப்சீரிஸிலும் ஹன்சிகா நடித்துள்ளார். விரைவில் இந்த வெப்சீரிஸ் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் தற்போது மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. பிரபல தொழிலதிபர் சோஹைல் கட்டுரியாவை ஹன்சிகா மோத்வானி கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் நேற்று டிசம்பர் நான்காம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் திரை உலகைச் சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் ஹன்சிகாவின் திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹன்சிகா மோத்வானியின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by ihansika_my_jaan❤️ (@ihansika_my_jaan)

 

View this post on Instagram

A post shared by ihansika_my_jaan❤️ (@ihansika_my_jaan)