ஓடிடியில் ஹன்சிகாவின் திருமணம்.. ரசிகர்களுக்கு Cute Surprise.. வைரலாகும் வீடியோ இதோ..

ஹன்சிகா திருமண வீடியோ ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது - Actress Hansika motwani wedding to stream ott platform | Galatta

தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. தமிழில் 'மாப்பிள்ளை' படம் மூலம் அறிமுகமாகி பின் விஜய், தனுஷ், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் கதாநாயகியாக நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் பிரபல நட்சத்திரங்களுடன் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் பெரிதளவு கதாநாயகியாக படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்தார். தற்போது ஹன்சிகா 'காந்தாரி', 'பார்ட்னர்', 'ரௌடி பேபி' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.  

முன்னதாக ஹன்சிகா தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது அதன் பின் கடந்த ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார்.  நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. திருமணம் குறித்து இதுவரை பெரிதளவு புகைப்படங்களையோ வீடியோக்களையோ பகிராமல் இருந்த ஹன்சிகா தற்போது 'லவ் ஷாதி டிராமா' என்ற பெயரில் தங்களது திருமண நிகழ்வை பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சியாக வெளியிடவுள்ளார் இதுகுறித்து ஹன்சிகா அறிவிப்பு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வழக்கமான ஹன்சிகாவின் க்யூட் ரியாக்ஷனுடன் நகைச்சுவை கலந்து வெளிவந்து வீடியோவை தற்போது ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவரது திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

What is a shaadi without a little drama? #HotstarSpecials #HansikasLoveShaadiDrama coming soon!
#Uttam_Domale @nowme_datta @sajeed_a @Avinaash_Offi @ajaym7

@DisneyPlusHS pic.twitter.com/PbebMagivN

— Hansika (@ihansika) January 18, 2023

ஹன்சிகா போன்று முன்னதாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ‘Nayanthara : beyond the fairy tales’ என்ற பெயரில் வெளியிடவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல் முதலில் திரில்லர் திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி -  ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதோ..
சினிமா

முதல் முதலில் திரில்லர் திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி - ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதோ..

வசூலை அள்ளி குவிக்கும் ஆட்டநாயகன் விஜய் – வாரிசு படக்குழு அறிவித்த 7 நாள் வசூல் விவரம்.. ரசிகர்கள் வைரலாக்கி வரும் பதிவு இதோ..
சினிமா

வசூலை அள்ளி குவிக்கும் ஆட்டநாயகன் விஜய் – வாரிசு படக்குழு அறிவித்த 7 நாள் வசூல் விவரம்.. ரசிகர்கள் வைரலாக்கி வரும் பதிவு இதோ..

‘இது எப்படி இருக்கு..’ - ஜெயிலர் படத்தில் இணைந்த புஷ்பா பட நடிகர்.. அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை களமிறக்கும் நெல்சன்
சினிமா

‘இது எப்படி இருக்கு..’ - ஜெயிலர் படத்தில் இணைந்த புஷ்பா பட நடிகர்.. அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை களமிறக்கும் நெல்சன்