பூவரசம் பீப்பி படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானவர் ஹலீதா ஷமீம். அதைத் தொடர்ந்து அவர் சமுத்திரக்கனி, சுனைனா, சாரா வைத்து சில்லு கருப்பட்டி எனும் படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

samuthirakani

அதன் பிறகு சமுத்திரக்கனி வைத்து ஏலே எனும் படத்தை ஆரம்பித்தார். மே மாதம் பழனியில் துவங்கிய இதன் படப்பிடிப்பு முழுமூச்சில் முடிந்தது. நடிகர் மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கபீர் வாசுகி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஒய் நாட் பிலிம்ஸ், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, புஷ்கர் - காயத்ரி தங்களது வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் முதன்முறையாக தயாரிக்கின்றனர்.

aelay

Aelay

தற்போது இப்படம் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணியில் இருப்பதாகவும். விரைவில் முடிவடையும் என்று பதிவு செய்துள்ளார் இயக்குனர் ஹலிதா.