கடந்த வருடம் டிசம்பரில் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்த திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்த படத்தை அனைவரும் ரசித்து வருகின்றனர். சமுத்திரக்கனி, சுனைனா, லீனா சாம்சன், பேபி சாரா, மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

halithashameem

இயக்குனர் ஹலீதா ஷமீம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் பதிவு செய்துள்ளார். அதில், இந்த ஊரடங்கு எனக்கு பல நேரங்களில் மன அழுத்தம் தந்தது, இறுதியாக ஏஞ்சலிடம் இருந்து எனக்கு மெசேஜ் வந்தது என்று பகிர்ந்துள்ளார். அதில் நடிகை சாய் பல்லவி, சில்லுக்கருப்பட்டி பார்த்த பிறகு நானும் எனது பெற்றோரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தோம். உங்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இதமான உணர்வுகளை வழங்கிய உங்களுக்கு நன்றி. இந்தமாதிரி நிறைய  படங்கள் செய்யுங்கள் என்று வாழ்த்தியுள்ளார். 

Saipallavi

நான்கு காதல் கதைகளை கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் ஏராளம். அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய்கார்த்திக் கண்ணன், யாமின் என 4 பேர் ஒளிப்பதிவு செய்த்திருந்தனர். பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்தார். இயக்குனர் ஹலீதா அடுத்ததாக ஏலே என்ற படத்தை இயக்கவுள்ளார்.