ரகுல் ப்ரீத்தின் புதிய வீடியோ பாடல் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | November 26, 2019 19:09 PM IST
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ரகுல் ப்ரீத் சிங்.அவ்வப்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.கடைசியாக தமிழில் சூர்யா நடித்த என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார்.மர்ஜவான் என்ற ஹிந்தி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மிலாப் சவேரி இந்த படத்தை இயக்கியுள்ளார்.Sidharth Malhotra மற்றும் Tara Sutaria இந்த படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்துள்ளனர்.Riteish Deshmukh இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார்.இந்த படம் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகியுள்ளது.
திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் இந்த படத்தில் இருந்து ஒரு முக்கிய பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ரகுல் ப்ரீத்தின் நடனத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.