காக்க காக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கெளதம் மேனன்.கடைசியாக இவர் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசானது.

GVM About His WebSeries And Ondraga Songs

இதனை தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் வருண் நடிக்கும் ஜோசுவா என்ற படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கெளதம் மேனன் இயக்கிய குயின் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

GVM About His WebSeries And Ondraga Songs

இதனை அடுத்து இந்த லாக்டவுன் நேரத்தில் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தையும்,ஒரு சான்ஸ் குடு என்ற ஆல்பம் பாடலையும் வெளியிட்டார் கெளதம் மேனன்.இதில் சமீபத்தில் வெளியான ஒரு சான்ஸ் குடு பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

GVM About His WebSeries And Ondraga Songs

இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கவும்,அவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் கெளதம் மேனன் ஒரு சான்ஸ் குடு குழுவினருடன் லைவாக வந்தார்.ரசிகர்களின் பல முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்த கெளதம் அடுத்ததாக அவளே என்ற பாடலை ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் அதற்கான ஹீரோயின் தேடும் படலம் நடந்து வருவதாக தெரிவித்தார்.இதனை தவிர இன்னும் 15க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன என்றும் ,அமேசான் ப்ரைம் 2 சீரிஸ் ,netflix-க்கு 1 சீரிஸ் இயக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A chat...

A post shared by Gautham Vasudev Menon (@gauthamvasudevmenon) on