வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ் குமார். இசையமைப்பாளர் மட்டும் அல்லாது சீரான நடிகராகவும் உருவெடுத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படமான ட்ராப்சிட்டி படத்தில் நடித்துள்ளார். 

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். அபர்நிதி, ராதிகா, ரோபோ ஷங்கர், யோகிபாபு போன்றோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் முதல் பாடலான காத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரிசையாக படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ், இசையமைப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 

இந்த லாக்டவுனில் சர்வதேச போதை ஒழிப்பு நாளில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ராஜிவ் மேனன் இயக்கி ஒளிப்பதிவு செய்த இந்த பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து பாடியிருந்தார். தற்போது நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சூரரைப்போற்று படத்தின் மாறா தீம் பாடலை சேர்த்துள்ளார். 

மாறா தீம் பாடலை பற்றி கூறவேண்டுமென்றால், நடிகர் சூர்யா பாடிய பாடலாகும். அறிவு இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார். 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. 

ஜிவி பிரகாஷின் இந்த பதிவு இணையத்தை அசத்தி வருகிறது. அடுத்த அப்டேட் எப்போது என்று அன்பு தொல்லை செய்து வருகின்றனர் ரசிகர்கள். வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கிறார். இது தவிர்த்து விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி படத்திற்கும், தனுஷ் நடிப்பில் தயாராகவிருக்கும் D43 படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார். 

இரண்டு நாள் முன்பு, சூர்யா பிறந்தநாளில் சூரரைப் போற்று சிறப்பு அறிவிப்பு வெளியாகும் என்று பதிவு செய்திருந்தார் ஜிவி பிரகாஷ். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் திரை விரும்பிகள். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#reels #new #gvprakash

A post shared by G.V.Prakash Kumar (@gvprakash) on